தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் முதல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். தமிழக முதல்வராக பதவியேற்ற உடன் ஸ்டாலின், முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், குடும்ப ரேஷன் அட்டை களுக்கு ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து நாளை முதல் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல் படுத்த படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் அதிமுகவில் சிக்கல் நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக ஓபிஎஸ் மற்றும் ஜிபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு சசிகலாவை ஆதரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.