Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆட்சியில் இல்லை…! இப்போ அதிகமாவே இருக்கு…. அசுர வேகத்தில் செயல்படும் ஸ்டாலின் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சியின் சார்பில் இப்போதும் கூட உடனடியாக ஒரு 20 கார் ஆம்புலன்ஸ்களை தயார் செய்திட வேண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.கடந்த ஒரு வார களத்திற்கு முன்னாள் வரை 20 ஆயிரத்திற்குள்ளே தான் அந்த பரிசோதனைகள் என்பது செய்யப்பட்டுவந்தது.

ஆனால் தற்போது 25 ஆயிரம் வரை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே அந்த பரிசோதனைகளை கூடுதலாக செய்வதால் தான் தொற்றாலர்களை துல்லியமாக கண்டறிய முடிகிறது. அந்த வகையில் தான் ஒரு 600 தொற்றாளர்கள்  கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். அதையும் கூட 2, 3 நாட்களுக்குள் 30 ஆயிரம் வரைக்கும் அந்த பரிசோதனைகளை கூடுதலாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலை மாநகராட்சி உடனடியாக மேற்கொள்ள இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே இந்த இரண்டாவது அலைக்கு ஆக்சிஜன் என்பது ஒரு பெரிய பணி என்பது இருந்தது, ஆக்சிஜன் தேவை, ஆக்சிஜன் இருப்பு ஆகியவை பெரிய அளவில் ஒரு பதற்ற சூழல் இருந்தது. 220 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே தமிழகத்தின் மே 7ஆம் தேதி கையிருப்பு இருந்தது.

ஆனால் தேவை என்பது ஒரு 600 மெட்ரிக் டன் அளவிற்க்கான தேவை இருந்தது. அப்பொழுது மிகப் பெரிய அளவிலான அது தட்டுப்பாட்டை போக்குவதற்கு அப்பொழுது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அசுரவேகத்தில் நடத்த நடவடிக்கைகள் மூலம் இன்றைக்கு ஏறத்தாள 1,400 மெட்ரிக் டன் என்கின்ற அளவிற்கு கையிருப்பு உயர்ந்து இருக்கிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பிலேயும், கோவிட் நல மையன்களில் ஆக்சிஜன்  தேவைப்பட்டால் அதற்கு உடனடியாக நடவடிக்கை என்ற வகையில் ஒரு ஆயிரம் செரிவூட்டிகள் அதாவது கான்சன்ட்ரேசன் என்று சொல்லக்கூடிய அந்த செரிவூட்டிகள் ஆயிரம் தயார் நிலையில் இருக்கின்றது.அதையெல்லாம் அது  இயங்கும் தன்மையை உறுதிபடுத்த  ஆணையர் அவர்கள் உத்தரவிட்டு இருக்கின்றார்கள்.

ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருக்கிற ஆயிரம் செரிவூட்டிகளையும் அதன் இயங்கும் தன்மை இப்போது பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அது  சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட இருக்கிறது. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் சென்னை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Categories

Tech |