கடந்த வருடம் அதிமுக ஆட்சியில் இருந்தபோது கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்கள் செவிலியர்களுக்கு உணவு வழங்கியதில் முறைகேடு நடந்ததா? என்று விசாரணை நடத்தப்படும் என்று தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் தினமும் ஒரு நபருக்கு உணவுக்காக ரூபாய் 600 செலவு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் தற்போது பணியிலிருக்கும் மருத்துவர், செவிலியர்களுக்கு ஒருநாள் உணவுக்கு செலவு ரூபாய் 350 முதல் 450 வரை செலவு செய்யப்படுகிறது என்றும், அதிமுக ஆட்சியில் இருந்த இடைத்தரகர்களை ஒழித்ததால் அரசின் பணம் ஒரு மாதத்திற்கு ₹10 கோடி மிச்சப்படுத்தப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.