தமிழகத்தில் 120 பக்க வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். 2020-2021 ஆம் ஆண்டில் தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக சரிந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2011-16 இல் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.17,000 கோடி. 2016-21இல் அதிமுக ஆட்சியின் வருவாய் பற்றாக்குறை ரூ.1.50 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் அதிக வருவாய் பற்றாக்குறை கொண்ட மாநிலம் தமிழகம் மட்டும் தான் என பரபரப்பு செய்தியை தெரிவித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.