Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ஆதாரத்தோடு பேசும்… பாஜக மாதிரி இல்லை…. பதிலடி கொடுத்த இபிஎஸ் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுகின்றது என்பது ஊடகத்துக்கு தெரியும்,  பத்திரிகைக்கும், நாட்டு மக்களுக்கும் தெரியும்.

வி.பி துரைசாமி அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு சான்று அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாட்டு மக்களுக்கு எங்களை பற்றி தெரியும். நாட்டு மக்களுக்கு பிரச்சினையை சட்டமன்றத்தில் புள்ளி விவரத்தோடு நானும்,  அண்ணன் கழக ஒருங்கிணைப்பாளர்கள்,  சட்டமன்ற உறுப்பினர்களும் தெரிவித்து இருக்கின்றோம்.

அதோடு பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற கட்சித்தலைவர் எ ப்படி பேசுகிறார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும்,  பத்திரிகைக்கும் தெரியும்,  ஊடகத்திற்கும் தெரியும்.திருச்சியில் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த பிறகு திருச்சி விமான நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

அன்றைய தினமே சென்னையில் ரவுடிகள் உடைய அட்டகாசம் பத்திரிகையிலும், ஊடகத்திலும் வந்திருக்கிறது. அதோடு மதுரை உயர்நீதிமன்ற கிளை போலீசாரின் ஒத்துழைப்போடு தான் குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளார்கள் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

அந்த அளவுக்குதான் சட்ட ஒழுங்கு இருக்கிறது.  தமிழகத்தை பொருத்த வரைக்கும் கொலை நடக்காத நாளே கிடையாது. அது போல வழிப்பறி, திருட்டு, கட்டபஞ்சாயத்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தில் ஏராளமான கொலைகள் நடைபெற்றிருக்கின்றன. திருட்டுகள் நடைபெற்றிருக்கின்றன. செயின் பறிப்பு நடைபெற்றிருக்கின்றன. அதையெல்லாம் இந்த அரசு தட்டிக் கேட்க அருகதை இல்லாத அரசாகத்தான் இருக்கின்றது. திறமை இல்லாத அரசாக பார்க்கின்றோம்.

Categories

Tech |