அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் அதிமுக நிர்வாகி ஒருவரிடம் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது கூட்டத்தில் பங்கேற்ற தென்காசி தெற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளர் உச்சிமாகாளி என்பவரிடமிருந்து 1 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.