தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது முக்கியமாக பார்க்கிறேன். அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும். பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Categories