தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மக்களை கவரும் வண்ணம் வேட்பாளர்கள் நேரடியாகவே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் மற்ற கட்சியினர் குறைகூறிக்கொண்டு விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபக்கம் தேர்தல் பறக்கும் படையினர் மக்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுப்பதற்காக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் அருகே பறக்கும் படை நடத்திய சோதனையில் முசிறி அதிமுக வேட்பாளர் மற்றும் சிட்டிங் எம்எல்ஏ செல்வராஜ்க்கு சொந்தமான காரில் இருந்து ஒரு கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என தங்களுக்கு தெரியாது என்று அதிமுக நிர்வாகிகள் கூறியதால் பறக்கும் படை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.