Categories
மாநில செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…. சென்னை ராயப்பேட்டையில் தொடங்கியது…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டடார்.

இந்நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொடறா தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுகவினருடன் சசிகலா பேசியதாக வெளியாகும் ஆடியோக்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |