Categories
மாநில செய்திகள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் OPS….. இணை ஒருங்கிணைப்பாளர் EPS…. இரட்டைத்தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம்.!!

அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.

தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக  ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் அதிமுக, திமுக, தேமுதிக  உள்ளிட்ட கட்சிகளுக்கு கடிதங்கள் அனுப்பி வருகின்றன. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த செயல்முறை விளக்கம் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.

அதன்படி அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை குறிப்பிட்டு தேர்தல் அதிகாரி கடிதத்தை அனுப்பி உள்ளனர். எனவே யாரிடம் அதிமுக என்ற ஒரு சூழல் நிலவி வரும் நிலையில் ஒன்றிய அரசு தரப்பிலிருந்து கொடுத்திருக்கக்கூடிய கடிதத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பதவியை  குறிப்பிட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு கடிதமானது அனுப்பப்பட்டுள்ளது. எனவே இன்றைய தினம் வரை டிசம்பர் 30ஆம் தேதி வரை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

இது அதிமுக தரப்பிலும் தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என்ற பதவி தற்போது வரை இருப்பதால் அதன்படி கடிதமும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜனவரி 16ஆம் தேதி ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை விளக்கம் தருகிறது ஆணையம்.

 

Categories

Tech |