Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக கட்சிக்குத்தான் உழைப்பேன்…. எனக்கு வருத்தம் இல்லை – ராமச்சந்திரன் ரவி

சட்டமன்ற தேர்தலில் ராமச்சந்திரன் ரவி அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் ரவி. இவர் தனது தாத்தா  உருவாக்கிய கட்சியானா அதிமுகவை தவிர வேறு எந்த கட்சிக்கும் உழைக்க போவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றார். இந்நிலையில்  நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தொகுதியில் ஆலந்தூர், பல்லாவரம், ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட போவதாக விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் கட்சியானது அவருக்கு வாய்ப்புகள் வழங்க மறுத்துள்ளது. இந்நிலையில் ராமச்சந்திரன் ரவி தேனிக்கு சென்ற போது அதிமுக நிர்வாகிகள் தரப்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் பேசிய அவர் “தனக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதால் நான் எந்த வருத்தமும் அடையவில்லை, நமக்கு கட்சியின் வெற்றிதான் முக்கியம். மேலும் இந்த தேர்தலில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆவார்” என்று கூறியுள்ளார். இதனையடுத்து சசிகலா அரசியலை விட்டு சென்றது அவரது சொந்த விருப்பம் அதில் யாரும் தலையிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

Categories

Tech |