அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
சென்னையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிமுக கட்சியின் தலைமைச் செயலகத்திற்குள் சென்று சூறையாடினார். இதன் காரணமாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இந்த வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக அதிமுக கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்தார். இந்த சீலை அகற்றக்கோரி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பில் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கட்சி அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் கட்சித் தொண்டர்கள் ஒரு மாதத்திற்கு பிறகு தான் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும் என நீதிபதி கூறினார். இந்நிலையில் கட்சி அலுவலகத்திற்குள் சென்ற சி.வி சண்முகம் விலை உயர்ந்த பரிசு பொருட்கள், கோப்புகள் போன்றவற்றை காணவில்லை என கூறி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் கட்சி அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிச்சாமிஇடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதால், இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.