தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுகவினர் மற்றும் திமுகவினர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகின்றது. மேலும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியினால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக விலகியது. இதை அடுத்து தமிழக பாஜக தலைவர் வேல்முருகன் பரப்புரையின் போது, அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியதால் அதிமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் கிடையாது. தேமுதிக விலகியதால் கூடுதல் இடங்களை கேட்டுப் பெறுவது பற்றி தேசியத் தலைமை முடிவெடுக்க வேண்டும். தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் இடையே எந்த சிக்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.