அதிமுக பாமக கூட்டணி உறுதியான பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பாட்டாளி மக்கள் தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி – அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை எங்களுடைய நோக்கம்…. எங்களுடைய கோரிக்கை…. வன்னியர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டுமெனகோரிக்கை வைத்தோம். அரசாங்கம் அதை நிறைவேற்றி இருக்கிறது. எங்களுடைய கோரிக்கை வணிகர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதனாலும் இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதியின் எண்ணிக்கையை நாங்கள் குறைத்து பெற்றிருகின்றோம்.
வணிகர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு பெறப்பட்ட தன் காரணத்திற்காக தொகுதி எண்ணிக்கை நாங்கள் குறைத்து பெற்றிருகின்றோம். ஆனாலும் எங்களுடைய பலம் குறைய போகுது கிடையாது. நிச்சயமாக எங்களுடைய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக வெற்றிபெறுவார்.