அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி விவரங்கள் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக தலைமையில் உருவாகியுள்ள கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதி விபரங்கள் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக- 170, பாமக 25, பாஜக 20, தேமுதிக 10, தமிழ் மாநில காங்கிரஸ் 7, கிருஷ்ணசாமி கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடனான ஒப்பந்தம் வருகின்ற 21 ஆம் தேதி டெல்லியிலும், மற்ற கட்சிகளுடன் ஆட ஒப்பந்தம் 24ஆம் தேதி சென்னையிலும் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.