பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது.
இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. அதே நேரத்தில் தேமுதிக துணைச் செயலாளரான எல்.கே.சுதீஷ் கூட்டணிக்காக எடப்பாடி தான் கெஞ்சிக் கொண்டிருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
இதனால் கூட்டணியில் தேமுதிக நீடிக்குமா ? இல்லை தனித்து போட்டியிடுமா ? என்பது பலத்த கேள்வியாக உருவெடுத்துள்ளது. ஒருவேளை திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி விட்டால் தேமுதிகவுக்கு 20 முதல் 25 தொகுதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ்ஸுக்கு இடங்கள் உறுதியாகும் வரை தேமுதிக – எடப்பாடி அணி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாகவே இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.