சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நாங்கள் குற்றப்பரம்பரை அல்ல கொற்ற பரம்பரை. கொற்ற பரம்பரையாக இருந்த இந்த மக்கள் இன்று அடிப்படை இட ஒதுக்கீடுகளை கேட்பதற்கு நீண்ட காலங்களாக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை, மறுக்கப்படுகிறது. அதற்கு மாறாக எங்கள் சமூகத்தை எடப்பாடி தலைமையிலான அரசும், என் சமூகம் சார்ந்த எட்டு அமைச்சர்களும் ஒன்றாக இணைந்து மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறார்.
சமூகநீதியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் என்ன சமுதாய மக்களை புறந்தள்ளி, ஒருசில சமுதாயத்தை தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகின்றார். அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதே எடப்பாடி பழனிச்சாமி புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு காசுகளை வாங்கி கொடுக்கும் கமிஷன் ஏஜென்ட் என்றெல்லாம் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்நிலையில் நிலையில் அரசியலுக்காக இன்றைக்கு எங்கள் சமூகத்தை புறந்தள்ளி, எங்களுக்கான இட ஒதுக்கீடுகள் மறுக்கப்படுகின்ற நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கூட்டணியில் இருந்த முக்குலத்தோர் புலிப்படை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து எங்களை நாங்கள் விடுவித்துக் கொள்கின்றோம் என தெரிவித்தார்.