Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக கொடியோடு நுழைந்த சசிகலா…! வரவேற்க குவிந்த அதிமுக தொண்டர்கள் … தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை புறப்பட்டார் சசிகலா. சசிகலாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமமுக, அதிமுகவினர் கைகளில் கொடிகளுடன் திரண்டுள்ளனர். சசிகலாவை வரவேற்பதற்காக சென்னை நெடுஞ்சாலையில் அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்திருக்கின்றனர்.

அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க தமிழ்நாடு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரியில் 17 இடங்களில் அமமுகவினர் மேளதாளத்துடன் வரவேற்க காத்திருக்கின்றனர். சசிகலாவை வரவேற்க தமிழ்நாடு எல்லையான ஜுஜுவாடி பகுதியில் அமமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் தமிழ்நாடு – கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு எல்லையான ஒசூர் ஜூஜூவாடியில் காரில் இருந்து அதிமுக கொடியை அகற்ற சசிகலாவுக்கு சிறிது நேரம் அவசாகம் வழங்கப்படும், கொடியை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்தனர்.  இந்நிலையில் சசிகலா அதிமுக கொடியுடன் தமிழக எல்லை வந்தடைந்தார். பின்னர் சசிகலா வேறு வாகனத்தில் மாற்றப்பட்டார். அந்த வாகனத்தில் அதிமுக கொடி அகற்றப்பட்டு இருந்தது, பின்னர் மீண்டும் அந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. சசிகலாவை வரவேற்க அதிமுகவினரும் குவிந்துள்ளதால் தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

Categories

Tech |