சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு கிளம்பியுள்ளார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு சென்னை புறப்பட்ட சசிகலா வாகனத்தில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்தக்கூடாது என்று அடுத்தடுத்து அதிமுக சார்பாக புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் துணிச்சலுடன் அதிமுக கொடி கட்டி சசிகலா வாகனம் புறப்பட்டுள்ளது. அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு கொடுக்க பட்டுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவர் தமிழகத்திற்கு நுழைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Categories