ஸ்டாலின் பற்றி விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரில் அதிமுகவின் சாதனைகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் திமுக தலைவரான ஸ்டாலினை விமர்சித்து இருந்ததாக கோரி திமுகவினர் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் அதிமுகவின் சாதனை போஸ்டர்களை கிழித்த குற்றத்திற்காக 5 பிரிவுகளின் கீழ் திமுக ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட 25 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.