சசிகலா அவர்களின் பலம் பலவீனம் குறித்து இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு தெரியும். அவர்களை கூட்டணியில் இணைப்பது குறித்து அதிமுக முடிவு எடுக்கட்டும் என்று சிடி ரவி சொன்ன கருது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எங்களை யாரும் நிர்பந்திக்க முடியாது. எங்களுடைய கட்சியின் உள் விவகாரங்களில் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது கிடையாது.
ஒரு பெரிய அளவிற்கான வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் சொன்னதுபோல சசிகலாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கான எந்த சாத்தியமும் இல்லை. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம்.
தினகரன் சொல்கிறார் அவர் தலைமையில் கூட்டணி என்று. இது பெரிய அளவிற்கு எள்ளி நகையாட கூடிய ஒரு கூட்டம். ஒரு குள்ள நரிகள் கூட்டமாக இருக்கின்றது அமமுக. சிங்கங்கள் கூட்டமாக இருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். குள்ளநரி கூட்டத்தின் பேச்சு என்பது ஒரு நகைச்சுவையாக தான் நிச்சயமாக மக்களுக்கு எடுத்துக் கொள்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.