அதிமுக முன்னாள் உறுப்பினரும் ஜெ.ஜெ கட்சியின் நிறுவனமான பி.ஏ. ஜோசப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கு முன்னாள் முதல்வர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.5000 கோடி செலவு செய்துள்ளதாக வார இருமுறை வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி வருகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆதரவை திரட்டுவதற்காக, மேலும் ரூ.1கோடி செலவு செய்ததாக அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து கட்சியின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி ஆகியோர் இடையிலான பிரச்சனை சாதி ரீதியிலான பிரச்சினை உருவெடுத்து மாநிலத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தி இருக்கிறது.
அதனால் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து, அககட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஜூன் 28ஆம் தேதி மனு அனுப்பியும் எந்த பதிலும் இல்லை. எனவே தனது மனுவை பரிசீலித்து அதிமுகவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கட்சியில் உறுப்பினராக இருக்கிறாரா? கூட்டம் நடக்கும் பகுதியில் வசிக்கிறாரா? என தலமை நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் பொதுநல வழக்கு என்ற பெயரில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்த ஒரு வார்த்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறி ரூ.25 ஆயிரம் அபாரதத்துடன் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.