கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால் மட்டுமே நாடு செழிப்பாக இருக்க முடியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில் பேசிய அவர், “கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால்தான் நாடு செழிப்பாக இருக்க இயலும்.கிராம பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை தற்போது மிக மோசமாக இருக்கின்றது.
இந்த நிலையில் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஏன் உத்தரவிட்டது?. கொரோனாவால் விட திமுகவை கண்டுதான் முதல்வர் மிகவும் அச்சம் கொள்கிறார். அதிமுக செயற்குழு கூட்டத்தில் வராத கொரோனா பாதிப்பு, கிராமசபை மூலமாக வந்துவிடுமா? “என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.