Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக தலைமையாக சசிகலா…. கட்சியை வழிநடத்துவது டிடிவி…. அரசியலில் திடீர் பரபரப்பு….!!!!

அதிமுகவானது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். ஜெயலலிதாவின் நிழலாக இருந்து அரசியல் செய்த சசிகலா தலைமை ஏற்க வேண்டும் என்று பேசத்தொடங்கிவிட்டனர். அதை ஓபிஎஸ் ஏற்பார் என்றும் கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. இந்நிலையில் தான் அதிமுகவில் திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது. தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தொண்டர்கள் தெரிவித்தனர். எனவே உடனடியாக அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து வருகிற 5 ஆம் தேதி சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது. . தற்போது தேனி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவு மற்ற மாவட்டங்களிலும் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, “சசிகலா அ.தி.மு.க.வின் தலைமையேற்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறும் போது சசிகலா தலைமையேற்று டி.டி.வி. தினகரன் வழிநடத்தினால் அதிமுக  நல்ல நிலைக்கு வரும். எனக்கு கட்சி பொறுப்பு தரவில்லை என்பதால் இவ்வாறு பேசவில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |