Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவி….. எடப்பாடியிடம் ஒப்படைக்க உத்தரவு…. அதிரடி தீர்ப்பு….!!!!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலையை அகற்றவும் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நுழைந்தார். இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இபிஎஸ் ஓபிஎஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை இன்று நீதிபதி சதீஷ்குமார் விசாரித்து தீர்ப்பு வழங்கினார்,. அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி உத்தரவு பிறப்பித்தார். மேலும் எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்கிறது. இன்னும் ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்களை அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவு வழங்கியுள்ளது.

Categories

Tech |