Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் பேனர்….. தொண்டர்களுக்கு வேண்டுகோள்….!!!!

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வெளியில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்தது. இதில் ஓபிஎஸ் படம் மட்டும் கிழிக்கப்பட்டது.

இது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதேபோன்ற பேனர் அங்கு உடனே வைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. காலையில் ஓபிஎஸ் படத்துடன் இருந்த பேனர் கிழிக்கப்பட்ட பேனர் சரி செய்யப்படும் என அதிமுக நிர்வாகிகள் கூறியிருந்தனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |