தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நிலையில் 2016ல் வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெண்களின் எண்ணங்களை மன ஓட்டத்தை சரிவர கணிக்க தவறிவிட்டனர். தற்போது பெண்கள் அதிகமாக அதிமுகவிற்கு வாக்களித்துள்ளனர். தனி பெருன்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்றும், பாஜக போட்டியிட்ட 20 இடங்களில் 10இல் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழையும் என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.