அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக திகழ்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகச்சிறந்த பிரதான எதிர்க்கட்சியாக மக்களின் குறைகளை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அவற்றிற்கு தீர்வு காணும் மாபெரும் மக்கள் இயக்கமாக அதிமுக செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அறிமுகம்தான். மேலும் எதிர்க்கட்சியின் செயல்பாடுகளில் அதிமுக பின் தங்கியுள்ளதாக மாயத்தோற்றம் சமீபகாலமாக உருவாக்கப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.