கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழகத்தில் நாங்கள் மட்டும் தான் எதிர்க்கட்சி. அதிமுக மற்றும் திமுக ஒரே கட்சி தான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் குமரிமாவட்டத்தில் உள்ள மலைகளில் கல்குவாரி என்கிற பெயரில் மலை மணல் எம் சாண்ட் நொறுக்கி கேரளாவிற்கு எடுத்து செல்கிறார்கள். கல் குவாரியை தனியாருக்கு கொடுக்கிற உரிமை அரசுக்குத்தான் உள்ளது. அரசுக்கு தெரியாமல் யாராலும் செய்ய முடியாது.
தொடர்ந்து போராடித்தான் தடுக்க முடியும். வேறு வழியில்லை. நாங்கள் போராடியதனால் பல இடங்களில் மணல் எடுப்பதை நிறுத்தியிருக்கிறார்கள். பல இடங்களில் மணல் எடுக்க கூடாது என்று போராடி இருக்கிறோம். கோட்பாட்டளவில் நாங்கள் திராவிட கட்சிகளுக்கு எதிராக நிற்கிறோம். திமுகவா? நாம் தமிழரா? என்று தான் சண்டை நடக்கிறது. அதிமுக சட்டசபையில் விவாதம் பண்றது இல்லை. தமிழகத்தில் நாங்க தான் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். அதிமுக, திமுக இரண்டும் ஒரே கட்சி ஆகிவிட்டது என்று பேசியுள்ளார்.