கூட்டுறவு சங்கங்களின் முறைகேடு தொடர்பாக திமுக அரசிடம் டிடிவி தினகரன் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்தல், கூட்டுறவு சங்கங்களை கலைப்பது தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,
நிதி மோசடிகள் நடைபெற்றதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக அமைப்பை கலைக்க திமுக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. அத்தகைய முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்று தெரியப்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளார். முன்பு நடத்தப்பட்ட கூட்டுறவுத் தேர்தலில் பழனிசாமி கம்பெனியோடு 60 : 40 என்ற பங்கீட்டில்திமுகவினரும் சேர்ந்து கொண்டு தானே ஏறத்தாழ எல்லா கூட்டுறவு சங்கங்களிலும் பதவிக்கு வந்தார்கள்? அப்படியென்றால், கூட்டுறவு சங்கங்களில் நடந்திருப்பதாக தற்போதைய திமுக அரசு கூறும் மோசடிகளில் அவர்களது கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா?
எந்தெந்தக் கூட்டுறவு சங்கங்களில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றன?
அதற்கு காரணமானவர்கள் யார்? என்பதைப் பற்றி தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்எனக் கோரியுள்ளார். அதைச் செய்யாமல் . ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாதா? முறைகேடுகள் தொடருமா? என்று கேள்வி எழுப்பும் வகையில் டிடிவி தினகரனின் பதிவு அமைந்திருக்கிறது. முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,கடந்த ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தவில்லை. தேர்தல் நடத்தாமலே கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக அதிமுகவினர் நியமிக்கப்பட்டனர். இதனால் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என கூறினார்.