Categories
மாநில செய்திகள்

“அதிமுக தீர்மானம்” சட்ட விரோதம் இல்லை…. உயர்நீதிமன்றம் கருத்து…!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றியதில் சட்டவிரோதம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவி கலைக்கப்பட்டு புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டது. இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த ராம் குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதில் எந்த சட்டவிரோதம் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆராய முடியாது எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றியதில் தவறில்லை எனவும் கருத்து தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Categories

Tech |