Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – தேமுதிக கூட்டணி… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!!!

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் வழங்குவதில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிக 20 தொகுதிகள் வரை கேட்டு விருப்ப பட்டியலை வழங்கியது. ஆனால் 15 தொகுதிகள் வழங்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படும் 15 தொகுதிகள், 1 ராஜ்யசபா இடத்தை தேமுதிக ஏற்க மறுத்துள்ளது. இதனையடுத்து 15 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டால் கையெழுத்திட வருமாறு அதிமுக அழைத்துள்ளது. ஆனால் கேட்கும் தொகுதியை ஒதுக்கிவிட்டால் கூட்டணி குறித்து அதிமுகவே முடிவு செய்யலாம் என தேமுதிக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை பேச்சுவார்த்தை நடக்குமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இந்நிலையில் பாமக தேர்தல் அறிக்கையில் தேமுதிக சின்னம் இடம்பெறாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடியாத நிலையில், தாமரை, இரட்டை இலை சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் தேமுதிக சின்னம் இடம்பெறவில்லை என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |