அதிமுகவின் தேர்தல் அறிக்கையை தடை செய்ய வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மனு அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் தங்களது வேட்பு மனுதாக்கல் முடித்துவிட்டனர். நேற்று யார் யாரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும் பல முக்கிய கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். அதில் அதிமுக சார்பில் பல முக்கிய அறிக்கைகள் வெளியிடப்பட்டது.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என அதிமுகவினர் தெரிவித்திருந்தனர். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது என்பது சாத்தியமில்லை. சாத்தியமில்லாத திட்டத்தை அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளதாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழக தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளார். அதனால் அதிமுக தேர்தல் அறிக்கைக்கு தடை விதிக்கவும் அவர் கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.