முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 5ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இது குறித்து தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதிமுக கழக நிரந்தர பொதுச் செயலாளர் அம்மா அவர்கள் நம்மை துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் டிசம்பர் 5.
அம்மாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அம்மா நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் அவரது புகைப்படத்தை வைத்து அதிமுகவின் கழகத் தொண்டர்கள் அனைவரும் மலர்தூவி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.