Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுக தொண்டர்கள் பாவம்…! ரொம்ப கஷ்ட படுவாங்க… இப்படி பண்ணிட்டாளே ?

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதற்கு அதிமுக தொண்டர்கள் கஷ்டப்படுவார்கள் என விஜயகாந்த மகன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த மகன் விஜய பிரபாகரன், அதிமுக தலைமை தான் இப்படி முடிவு எடுத்து இருக்கும். இதனால் அதிமுக தொண்டர்கள் எல்லாருமே கஷ்டப்படுவார்கள். அதிமுக தொண்டர்களை  நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

தேமுதிக தொண்டர்களும், அதிமுக தொண்டர்களும் எவ்வளவு நெருக்கமாக இவ்வளவு பழகிட்டு இருந்தாங்கள் என எல்லோருக்குமே தெரியும். அதிமுக தலைமையில் உள்ள  குழப்பங்களால் இப்படி  தவறான முடிவெடுத்து இருக்கிறார்கள்.

234 தொகுதிகளில் எங்கள் என்றாலும் தொண்டர்கள் என்னை ஜெயிக்க வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கு. எங்க அப்பா எந்த தொகுதியில் நிக்க சொல்லுறாங்களோ அந்த தொகுதியில் நிற்கின்றேன். இலவசங்களை தவிர்த்து வளர்ச்சி, வேலைவாய்ப்பு என நாட்டுக்கு என்னென்ன தேவையோ அந்த திட்டங்களை கொண்டு வர வேண்டும் என விஜய் பிரபாகரன் பேசினார்.

Categories

Tech |