தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மக்களிடையே நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ ரத்தினசபாபதி, புதுக்கோட்டையில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக தோல்வியடைந்தால் அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக வேட்பாளர் தீர்வில் சர்வாதிகார போக்கு அரங்கேறியுள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து ரத்தினசபாபதிக்கு தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் கூறியதாக அதிமுக விளக்கம் அளித்துள்ளது.