அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா நேற்று திருச்செந்தூர் சென்ற சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். மேலும் சசிகலாவை தேனி மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர், கட்சியில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்கக் கோரி சலசலப்பு ஏற்பட்டு வரும் நிலையில், இவர்களின் இந்த சந்திப்பால் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கட்சியின் தலைமை நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்து பேசி, ஓபிஎஸ் சகோதரர் ராஜா உட்பட தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் 37 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளனர். இதை அடுத்து நகர்ப்புற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.