மானூர் அருகே அதிமுக நிர்வாகியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ரூபாய் 77 ஆயிரத்தை பறிமுதல் செய்துள்ளார்கள்.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி ரூபாய் 77 ஆயிரம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து விசாரணை செய்த பறக்கும் படையினர் அவர் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி அங்கராஜ் என்று தெரியவந்தது.
மேலும் இவரிடம் அதிமுக வாக்குச்சாவடி நிர்வாகிகளின் பட்டியல் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பறக்கும் படையினர் அங்கராஜ்ஜிடமிருந்து ரூபாய் 77 ஆயிரத்தையும் , காரையும் பறிமுதல் செய்தது மட்டுமின்றி அங்கராஜை மானூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரூபாய் 27 ஆயிரம் கருவூல அலுவலகத்தில் வைக்கப்பட்டது.