Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

அதிமுக பணப்பட்டுவாடாவை மறைக்க…. இந்த அருவருப்பான செயலை பாஜக நடத்துகிறது – கே.எஸ் அழகிரி…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதற்கு மத்தியில் வருமான வரித்துறையினர் அரசியல் கட்சிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில், “அ.தி.மு.க பணப்பட்டுவாடாவை மறைக்கவே இந்த அருவருப்பான செயலை பா.ஜ.க நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |