CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் இந்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளார்கள். இதனால் இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்து அதை சட்டமாக கொண்டு வந்துள்ளார்கள்.
இதனால் அசாம் , திரிபுராவில் , மேகலாயா, அருணாச்சல பிரதேசம் என வடகிழக்கு மாநிலம் தொடங்கி மேற்கு வங்காளம் , பீகார் , ராஜஸ்தான் , மத்திய பிரதேசம் , டெல்லி , மகாராஷ்டிரா கர்நாடகா, கேரளா , தமிழகம் , புதுச்சேரி, ஆந்திர மாநிலம் , தெலுங்கானா உட்பட இந்தியாவின் 70 சதவீத மாநிலங்களில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.இந்த ஆட்சியில் இருப்பவர்களால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், துன்புறுத்தப்பட்டார்கள், பொய் வழக்குகளை போட்டு சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை சிறையில் அடைக்கின்றார்கள் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு , தேசிய மக்கள் தொகை பதிவேடு இதை எதிர்த்து தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் – திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி அரசு ஒரு சிறப்பு சட்டமன்றத்தைக் கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றினோம் என்று அவர் கூறினார்.