தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் அமமுக கூட்டணி அமைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தொகுதி பங்கீடு பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தென் மாவட்டங்களில் சசிகலாவின் தயவு நமக்குத் தேவை, அமமுகவை தம்முடன் இணைத்துக் கொண்டால் நமக்கு தான் நல்லது. இந்த நேரத்தில் அவர்களை சேர்க்காமல் ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
எங்களுக்கு 50 தொகுதிகள் ஒதுக்குங்கள். நாங்கள் அமமுகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்குகிறோம் என கூறியதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இது அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.