Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக -பாஜக… ஏழை எளிய மக்களுக்கான கூட்டணி… அமித்ஷா அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி என்பது ஏழை எளிய மக்களுக்கான கூட்டணி என்று பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது அதில் பேசிய அவர், “அதிமுக மற்றும் பாஜக கூட்டணி மக்களுக்கான கூட்டணி. ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த கூட்டணி உழைக்கும். ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி என்பது ஊழல் நிறைந்தது. குடும்ப ஆட்சியை அடிப்படையாகக் கொண்டது. கடந்த எழுபது ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் பொதுமக்களுக்கு வீடு இல்லை. ஏழு ஆண்டுகளில் மோடி அரசு அதனை செய்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |