Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணியில் வெடித்தது பிரச்சனை… பெரும் பரபரப்பு…!!!

அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக ஆதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு செய்து வருகிறது.

மேலும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுகவுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையின் போது பாஜகவினர் 60 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டும் என தொகுதிப் பட்டியலை அறிவித்தனர். ஆனால் 21 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என்று ஈபிஎஸ் கறாராக கூறியுள்ளார். அதனால் அதிமுக மற்றும் பாஜக விற்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |