தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சட்டப்பேரவைக் உள்நுழைய வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்திய இளைஞரணி மாநில மாநாடு சேலம் அடுத்துள்ள கெஜ்ஜல்நாயக்கம்பட்டி யில் நடைபெற்றது இளைஞரணி மாநில தலைவர் பி. செல்வம் இம்மாநாட்டை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ,மாநில தலைவர் வேல்முருகன், தேசிய அமைப்பாளர் சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் ரவி ,இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி சூர்யா வினோஜ் ஆகியோர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அ.தி.மு.க பாஜக கூட்டணி பெரும்பான்மையான பலத்துடன் சட்டப்பேரவைக்கு வரவேண்டும் என்றும் ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யப்படுவதாகவும் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் 100 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும் நாட்டினை தீர்மானிப்பதற்காக பாஜக அரசியல் நடத்திவருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்கத்தை அடைவதாகவும் கூறினார். நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிக அளவில் கொண்டிருப்பதாகவும் பங்குச் சந்தைகளின் வேகம் அதிகரிப்பதாகவும் கூறினார். விவசாயிகள் கட்டமைப்பில் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக சீர்திருத்தங்களை கொண்டுவரபடுவதாகவும் சேலம் – சென்னை விரைவு சாலை திட்ட பணிகள் 2021- 2022 ல் தொடங்கப் போவதாகவும் கூறினார். கொரோனாவால் சுகாதாரம் மட்டுமன்றி பொருளாதாரம் கெட்டுவிட்டது என்றார். பின் இந்திய அளவிலான இரண்டு ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளதாகவும் கூறினார்.