Categories
மாநில செய்திகள்

அதிமுக பாடம் கற்கவில்லை… கமிஷன் அடித்தது… ஸ்டாலின் அதிரடி குற்றச்சாட்டு…!!!

தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அதிமுக 2015 பெருவெள்ளத்தில் இருந்து பாடம் கற்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது.மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் பொது பலத்த சூறைக்காற்று வீசியதால் கூரை வீடுகள் அனைத்தும் காற்றில் பறந்து சென்றன. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், “அரசு நடவடிக்கையால் மழைநீர் தேங்கவில்லை என அதிமுக அரசு பொய் சொல்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து அதிமுக அரசு எந்த பாடமும் படிக்கவில்லை. கமிஷன் அடிப்பதில் மட்டுமே கவனமாக இருந்துள்ளது. அதனால்தான் இந்த முறையும் இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் புதிய வீடுகளைக் கட்டித்தர வேண்டும். மேலும் பயிர் காப்பீடு கட்டணம் செலுத்தும் கால அளவை நீட்டிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |