Categories
அரசியல்

“அதிமுக, பாமகவுக்கு அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின்!”….. வெளியான பரபரப்பு கடிதம்….!!!!

அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு கூட்டணியில் இணைய வேண்டி காங்கிரஸ், சிவசேனா, அதிமுக, பாமக உள்ளிட்ட 37 கட்சிகளுக்கு முக ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது கடந்த 2022 ஜனவரி 26 ஆம் தேதி 73 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வேலையில் கூட்டாட்சி மற்றும் சமூக நீதி கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சி தலைவர்கள், குடியுரிமை சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனை உள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒன்றிணைத்து அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு ஒன்றை தொடங்க உள்ளதாக அறிவித்து இருந்தேன். எல்லோருக்கும் அடிப்படையாக கொண்டதுதான் சமூக நீதி.

தமிழ்நாட்டில் வாழ்க்கையின் அனைத்து கூறுகளிலும் சமூக நீதிக்கான விதைகளை மக்களின் மனங்களிலும், எண்ணங்களிலும் விதைத்து தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடர் ஏற்படுத்திய சமூகநீதி புரட்சியை அனைவரும் அறிவர். எனவே அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாக தக்க நபர்களை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். மேலும் சமூகநீதி கொள்கையை முன்னெடுத்து பிற்படுத்தப்பட்ட பட்டியலில் மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களை பாதுகாத்திட அனைத்திந்திய சமூக கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. எனவே இந்த முன்னெடுப்பில் எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் இணைய வேண்டி 37 தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அவர்கள் பின்வருமாறு,

1. திருமதி. சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்)
2. திரு. லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
3. திரு. ஃபரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு)
4. திரு. சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்)
5. திரு. டி. ராஜா (இந்திய கம்யூனிஸ் கட்சி)
6. திரு. சீதாராம் யெச்சூரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்)
7. திரு. எச்.டி. தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்)
8. திரு. என். சந்திரபாபு நாயுடு (தெலுகு தேசம்)
9. திரு. நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்)
10. செல்வி. மமதா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்)
11. திருமதி. மெஹ்பூபா முப்தி (ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி)
12. திரு. உத்தவ் தாக்கரே (சிவ சேனா)
13. திரு. அரவிந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி)
14. திரு. கே. சந்திரசேகர ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி)
15. திரு. ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்)
16. திரு. ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
17. திரு. என். ரங்கசாமி (என். ஆர். காங்கிரஸ்)
18. திரு. லலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்)
19. திரு. அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி)
20. செல்வி. மாயாவதி (பகுஜன் சமாஜ்)
21. திரு. பவன் கல்யாண் (ஜன சேனா)
22. திரு. வேலப்பன் நாயர் (அகில இந்திய பார்வார்டு பிளாக்)
23. திரு. அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்)
24. திரு. கே.எம். காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
25. திருமதி. ரேனு ஜோகி (ஜனதா காங்கிரஸ்)
26. திரு. அமரீந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்)
27. திரு. சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம்)
28. திரு. சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி – ராம் விலாஸ்)
29. திரு. ராஜ் தாக்கரே (மகாராஷ்டிர நவநிர்மான் சேனா)
30. திரு. ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்திய தேசிய லோக் தளம்)
31. திரு. கே.எம். மணி (கேரளா காங்கிரஸ் -எம்)
32. திரு. ஓ. பன்னீர்செல்வம் (அ.இ.அ.தி.மு.க)
33. திரு. வைகோ (ம.தி.மு.க)
34. மருத்துவர். ராமதாஸ் (பா.ம.க)
35. திரு. தொல். திருமாவளவன் (வி.சி.க)
36. பேராசிரியர் ஜவாஹிருல்லா (ம.ம.க)
37. திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் (கொ.ம.தே.க)

Categories

Tech |