தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
அவரின் வருகை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி அமைய வேண்டும் என இரு தரப்பு நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வடமாநிலங்களில் பாமக துணை வேண்டுமென்பதால் கூட்டணியில் தொடர பாமகவின் கோரிக்கைகள் சிலவற்றில் இருக்கு முதல்வர் தலையசைத்து கூட்டணியை உறுதி செய்து விட்டதாகவும், இன்று முதல் வரை அவரது இல்லத்தில் சந்தித்து ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.