Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக புகழுக்கு இழுக்கு உண்டாக்குறீங்க…. இனி இதில் பங்கேற்க மாட்டோம்…. இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை…!!!

கடந்த ஆட்சியில் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்த நிலையில் எதிர்க்கட்சியாக திமுக செயல்பட்டு வந்தது. இதனையடுத்து நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக இனிமேல் பங்கேற்காது என்று அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மக்களுடைய அடிப்படைத் தேவைகள் மற்றும் தினசரி பிரச்சனைகளை நிறைய இருக்கின்ற வேளையில் அதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் ஊடக நிறுவனங்கள் அதிமுகவின் புகழுக்கு, இழுக்கு ஏற்படுத்தும் வகையில் மனம் போன போக்கில் கழக தலைவர்களுக்கு களங்கம் ஏற்படும் வகையில் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது வருத்தத்தை அளிக்கிறது. எனவே இனி அதிமுக சார்பில் யாரும் ஊடக நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். எனவே யாரையும் வைத்து பேசுவதை நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |