அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்பட கோரி வங்கிகளுக்கு இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் உள்ள தனது அனுமதி இல்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடாது என வங்கிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ் கோரிக்கைகளை வங்கிகள் நிராகரித்துள்ளது. அதிமுக சார்பில் கரூர் வைசியா மற்றும் இந்தியன் வங்கியில் கணக்கு இருக்கிறது. மேலும் இந்த இரண்டு வங்கிகளிலும் சுமார் 300 கோடி வரை உள்ளது.
கரூர் வைசியா வங்கியில் மட்டும் அதிமுக கணக்கில் சுமார் 200 கோடிக்கு மேல் நிரந்தர வைப்புத் தொகை இருக்கின்றது. இந்த வங்கிகளின் மேலாளர்களுக்கு முன்னால் முதல்வர் ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக வரவு செலவு கணக்கு தன்னை கேட்காமல் மேற்கொள்ளக்கூடாது என எழுதியுள்ளார். தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவின் வங்கி கணக்குகள் தொடர்பான வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கட்சியின் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கும் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் வங்கி கணக்குகளை கையாழ்வார் என எழுதியுள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய இந்த கடிதத்தையும், அத்துடன் இணைக்கப்பட்ட ஆதாரங்களையும் சரிபார்த்த வங்கிகள் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை பெற்றுக் கொண்டது. எதிர்வரும் 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதற்கு தேவைப்படும் கொள்கைகளை புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் காசோலை மூலமாக வங்கியை நாடி இருக்கிறார். அதற்கு வங்கி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெறும் கடிதம் மட்டும் அனுப்பியிருந்தால் அதற்கு தேவையான போதுமான ஆவணங்கள் சேர்க்காத காரணத்தால் அவரது கோரிக்கைகளை வங்கி ஏற்கவில்லை. ஆனால் ஆவணங்களுடன் எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தை வங்கியில் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கட்சியின் நிலவி வரும் அதிகார சண்டையினால் வருவாகத்துறை சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளது. தலைமை அலுவலகம் யாருக்கு என்பது இன்னும் சற்று நாட்களில் தெரிந்துவிடும் என்கின்ற நிலையில் முதலில் வங்கி கணக்குகளை இயக்கும் உரிமை எடப்பாடி தரப்பு பெற்றுள்ளது.