Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை தாரைவார்த்து விட்டு…  சப்பை கட்டுகட்டாதீங்க… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை திமுக தாரைவார்த்துக் கொடுத்து விட்டது என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் கேட்காமல் தண்ணீரை திறந்து விட்டதற்கு எதிராக கம்பம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் வாஉசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியதாவது: “முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கேரளா அரசு தண்ணீர் திறக்காததால் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கானது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் நடைபெற்றது. பின்னர் கடும் சட்ட போராட்டத்திற்கு பிறகு 142 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம் என்று தீர்ப்பு கிடைத்தது. அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகிய அனைத்து உரிமைகளும் தமிழ்நாட்டுக்கே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜெயலலிதா பெற்றுத் தந்துள்ள தீர்ப்புக்கு திமுகவினர் இப்போது பாதகம் விளைவித்து வருகின்றனர். கேரளாவிலிருந்து 138 அடி நீர்மட்டம் இருக்கும்போதே தண்ணீரை திறந்து விட்டுள்ளன. ஆனால் துரைமுருகன் இதுகுறித்து சப்பைக்கட்டு கட்டி பேசிவருகிறார். அதிமுக ஆட்சியில் 142 அடி நீர் தேக்க முடிந்தது. ஆனால் தற்போது ஏன் முடியவில்லை?

ஜெயலலிதா பெற்றுத்தந்த உரிமையை மீட்டெடுக்க அதிமுக தொடர்ந்து போராடும் என்று கூறினார். எங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடுமையான போராட்டத்தின் பிறகு பெற்றுத்தந்த உரிமையை திமுக அரசு தற்போது தாரைவார்த்து வருகின்றது என்று விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |